புதுதில்லி,ஜன.16- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2020 - 2021ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். ஜனவரி 31-ல் தொடங்கும் நாடாளு மன்ற முதற்கட்ட கூட்டத்தொடர் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31-ல் நடைபெறும் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். நிலைக்குழுக்கள், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மானியங்களுக்கான கோரிக்கைகளை பரிசீலிக்கவும், அவற்றின் அறிக்கை களைத் தயாரிக்கவும் உதவும் வகையில், நாடாளுமன்றம் பிப்ரவரி 11 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு மார்ச் 2 ஆம் தேதி மீண்டும் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஏப்ரல் 3 ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடை பெறும் என உத்தேசமாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.